SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் கடை முன்பு பெண்கள், குடிமகன்கள் நேருக்கு நேர் மோதல்

2018-07-12@ 20:52:38

தாராபுரம்: தாராபுரம் அருகே மதுக்கடையை மூட பெண்களும், மூடக்கூடாது என குடிமகன்களும் திரண்டு நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தளவாய்பட்டணத்தில் ஏற்கனவே செயல்பட்டுவந்த டாஸ்மாக் மதுபானகடை கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மதுபானகடை திறக்கப்பட்டது. 2 நாட்களாக அங்கு குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது.இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று மாலை மதுக்கடை முன்பு திரண்டு கோஷமிட்டனர். கடையை மூட வேண்டும் என ஊழியர்களிடம் கூறினர்.

அப்போது மது வாங்கிக்கொண்டிருந்த குடிமகன்கள் பெண்கள் மீது கோபத்துடன் பாய்ந்தனர். மதுக்கடையை மூடக்கூடாது என கூச்சலிட்டனர். குடிமகன்களும், பெண்களும் நேருக்கு நேர் நின்று கொண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிமகன்கள் தகாத வார்த்தை பேசி கலாட்டா செய்யவே பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குடிகாரர்களை ஏவிவிட்டு பெண்களிடம் மோத வைக்கும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்