SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னமனூர் அருகே மான் இறைச்சி விற்க முயன்றவர்களுக்கு வலை

2018-07-12@ 20:40:12

சின்னமனூர்: சின்னமனூர் அருகே இறந்த கடமானின் உடலை அறுத்து இறைச்சியை விற்க முயன்றவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஹைவேவிஸ் பேரூரட்சி பகுதியில் வனத்துறை ரேன்ஜர் முருகன் மற்றும் ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர். மேகமலை பஸ் ஸ்டாப் நிழற்குடை பகுதியில் அவர்கள் கண்காணிப்பில் இருந்த போது, அப்பகுதியில் இறந்த நிலையில் கடமானின் தலை மற்றும் எலும்புகள் கிடப்பதை பார்த்தனர்.
வனத்துறையினர் விசாரணையில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 வயதுள்ள கடமான் ஒன்று அப்பகுதியில் உள்ள நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது.

மேலும் அடையாளம் தெரியாத சிலர் இறந்த கடமானின் உடலை அறுத்து இறைச்சியை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.தொடர்ந்து வனத்துறையினர் தீவிரமாக தேடியபோது, அருகில் உள்ள ஒரு மாட்டு கொட்டைகையில் கடமானின் இறைச்சியை மர்மநபர்கள் போட்டு விட்டு தப்பியோடியது தெரிந்தது. இதனையடுத்து கடமானின் இறைச்சியை மீட்ட வனத்துறையினர், அதனை கால்நடை மருத்துவர்கள் ஆய்வுக்கு பின்னர் அப்பகுதியிலேயே பள்ளம் தோண்டி புதைத்தனர்.மேலும் இறந்த கடமானின் உடலை வெட்டி இறைச்சியை விற்பனைக்கு எடுத்து சென்றவர்களை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்