படியில் பயணம்... நொடியில் மரணம்... அரசு பஸ்சில் மாணவிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
2018-07-12@ 20:39:27

ஆரல்வாய்மொழி: படியில் பயணம்... நொடியில் மரணம்... என்பார்கள். அரசு பஸ்களில் சும்மா... வாசகத்துக்காக எழுதப்பட்டவை இவை அல்ல. பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால் ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வருகின்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினசரி படி கட்டில் தொங்கி கொண்டுதான் பயணம் செய்கின்றனர். இந்த பயணத்தை தடுக்க வேண்டிய கண்டக்டரோ, போக்குவரத்து துறையோ, காவல்துறையோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது பற்றிய விவரம் வருமாறு: ஆரல்வாய்மொழி, குமாரபுரம், யாக்கோபுரம், ஆவரைகுளம், சிதம்பரபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் தோவாளை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் அதிக அளவில் படித்து வருகின்றனர். இவர்கள் அரசின் இலவச பஸ் பாசை பயன்படுத்தி தினசரி அரசு பேருந்தில் பயணம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆகவே காலை மற்றும் மாலை வேளைகளில் தாங்கள் செல்லக் கூடிய அரசு பஸ்சுக்காக பஸ் நிலையங்களிலும், நிறுத்தங்களிலும் பல மணிநேரம் காத்திருக்கின்றனர். ஆனால் சில அரசு பேருந்துகள் மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்ற குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என்று ெதரிகிறது.
ஒரு சில நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே சென்று விடுகின்றன. பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருகின்ற பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இதனால் மாணவ- மாணவிகளின் கூட்டம் காலை வேளையில் பஸ்சில் அதிகமாக காணப்படுகிறது. ஒரு சில நாட்களில் போதிய இடம் கிடைப்பது இல்லை. ஆகவே வேறு வழியின்றி படி கட்டில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் படிகட்டில் தொங்கி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது குறித்து பொது மக்கள் கூறியது: ஆரல்வாய்மொழி, குமாரபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகமான மாணவ-மாணவிகள் இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பேருந்தில் பள்ளிக்கு செல்கின்றனர். இப்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளிலும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் இலவச பஸ் பாஸ் மூலம் செல்கின்ற அரசு பேருந்துகள் முன்பாகவோ, தாமதமாகவோ செல்வதால் பள்ளி விட்டதும் செல்வதற்கு பேருந்து இன்றி மாணவ-மாணவிகள் தவிக்கின்றனர். குறிப்பிட்ட சில பேருந்துகளில் மட்டுமே செல்வதற்கு இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் அந்த பேருந்துக்காக காத்து நின்று நாகர்கோவிலில் இருந்து வருகின்ற ஒரே பேருந்தில் அனைத்து மாணவர்களும் ஏறுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே ஆரல்வாய்மொழி, குமாரபுரம், யாக்கோபுரம், சிதம்பரபுரம், ஆவரைகுளம் உள்பட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகளின் வசதிக்காக இலவச பஸ் பாஸ் ஏற்றுக்கொள்ளப்படும் அரசு பேருந்துகள் அந்த பகுதியில் இருந்த காலை 8.30 மணிக்கு புறப்படும் வகையில் இயக்க வேண்டும் என்பதுதான் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் ஒட்டு மொத்த கோரிக்கை.மேலும் இலவச பஸ் பாஸ் வைத்து ஏறுவதற்கு தகுந்தார் போல் நாகர்கோவிலில் இருந்து வருகின்ற அரசு பேருந்து தோவாளை பகுதிக்கு சுமார் மாலை 5.30 மணிக்கு வரும் வகையில் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் இந்த பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிரமமின்றி கல்வி நிறுவனத்துக்கு சென்றுவரவும், பெரிய விபத்துக்கள் நடைபெறாமல் தவிர்க்கவும் முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரி படிப்பை தொடரும் போதே மாணவிகள் காதல் வலையில் விழுந்து விடுகின்றனர். தீவிர காதலில் விழுந்த மாணவர்கள் பலர் நோட்டு புத்தகம், சினிமா தியேட்டர்கள், முக்கிய சுவர்களில் தங்களது காதலியை நினைத்து கவிதை எழுதுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அரசு பஸ்களில் முன்பு திருக்குறள்கள் அதிகமாக எழுதி இருப்பதை பார்க்க முடியும். தற்போது இதனுடன் காதல் கவிதைகளை அதிக அளவில் வாசிக்க முடிகிறது.இதே போலத்தான் இன்று காலை நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த பஸ்சில் பயணிகளின் கூட்டமும் அதிகமாக இருந்தது. அப்போது பஸ்சில் திருக்குறளுக்கு பதிலாக காதல் கவிதை எழுதப்பட்டு இருந்தது. காதலன் ஒருவன் தனது காதலியை எண்ணி மிக உருக்கமாக எழுதப்பட்டு இருந்த அந்த காதல் கடிதத்தை பயணிகள் ரசித்து படித்தனர்.
மேலும் செய்திகள்
தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன?...ஐகோர்ட் கிளை கேள்வி
அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்?... நீதிபதி சரமாரி கேள்வி
டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார்: அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்
புளியங்குடியில் யானைகள் மீண்டும் அட்டகாசம் : விவசாயிகள் பீதி
மீனவர் வலையில் சிக்கிய 15 டன் கொம்பன் திருக்கை
80 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!