SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலங்களவையில் 22 மொழிகளில் பேச அனுமதி: வெங்கையா நாயுடு தகவல்

2018-07-12@ 20:15:26

புதுடெல்லி: மாநிலங்களவையில் 22 மொழிகளில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது மொழிகளில்  பேசுவதற்கு வசதியாக 22 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதியும், மாநிலங்களவையின் தலைவருமான வெங்கையா நாயுடு  இதற்கான அனுமதியை வழங்கியதுடன், மொழிபெயர்ப்பாளர்களையும் நியமித்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா, உருது, அசாமி ஆகிய 12 மொழிகளில் பேசுவதற்கு  ஏற்கனவே அனுமதி உண்டு. இந்நிலையில், போடோ, மைதாலி உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியில் பேசும்போது  தங்களது கருத்துக்களை உறுப்பினர்கள் எளிதாகவும், ஆழமாகவும் தெரிவிக்க முடியும். இந்நிலையில், 22 மொழிகளில் பேச அனுமதி  வழங்கப்பட்டிருப்பது மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்