SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாடுதுறையில் பரபரப்பு சாலையில் திடீர் பள்ளம்

2018-07-12@ 19:59:29

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 2009ம் ஆண்டிலிருந்து பாதாள சாக்கடைத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.  2012 வரை குடிநீர் வடிகால் வாரியமும், 2012 முதல் தற்போது வரை தனியார் பராமரிப்பிலும் திட்டம் செயல்படுகிறது.    3,406 ஆள் நுழைவுத்தொட்டிகள், 8 கழிவு நீரேற்று நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 68 கி.மீ. தூரத்திற்கு  இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சேகரிக்கப்படும் கழிவுநீர் ஆறுபாதி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்டு சத்தியவான் வாய்க்காலில்  விடப்படுகிறது. கடந்த மார்ச் 7ம் தேதி மயிலாடுதுறை கச்சேரி சாலையில் திடீரென்று பெரும் பள்ளம் ஏற்பட்டது. 23 அடி ஆழத்தில் பாதாள சாக்கடைக் குழாயிலிருந்து கழிவுநீர் வெளியேறியது. கச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.  

இதனால் நகரில் உள்ள 8 நீரேற்று நிலையங்களிலும் பணி நிறுத்தப்பட்டது. நகரின் ஒட்டு மொத்த கழிவுநீரும் கச்சேரி சாலையில் தேங்க ஆரம்பித்தது. தெருவெங்கும் துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் கழிவுநீர் அனைத்தும் பழங்காவிரியில் திருப்பி விடப்பட்டு பாதாள சாக்கடை பைப் அடைக்கும் பணி நடைபெற்றது. ஒரு மாதத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை தரங்கை சாலை நகராட்சி அலுவலகம் அருகில் பெரிய கோயில் வடக்கு கோபுர வாயில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.  உடனடியாக மயிலாடுதுறை ஆர்டிஓ தேன்மொழி மற்றும் நகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று பள்ளம் ஏற்பட்ட சாலையை பார்வையிட்டனர். இதையடுத்து அப்பகுதி போக்குவரத்து மயூரநாதர் ஆலய கீழவீதி வழியாகத் திருப்பி விடப்பட்டது.

பொக்லைன் மூலம் பள்ளத்தின் தன்மை குறித்து ஆழப்படுத்தி பார்க்கப்பட்டது. 15 அடி ஆழம் வரை தோண்டப்பட்டும் என்ன காரணம் என்று தெரியவில்லை. இதன்காரணமாக 8 கழிவு நீரேற்று நிலையங்களிலிருந்து  உடனடியாக கழிவுநீர் ஏற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.இன்று மாலைக்குள் ஆங்காங்கே மயிலாடுதுறை நகர் முழுவதும் உள்ள ஆள்நுழைவுத் தொட்டியிலிருந்து கழிவுநீர் சாலையில் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகை கலெக்டர் நேரில் மயிலாடுதுறைக்கு சென்று பாதாள சாக்கடை உடைப்புப் பணியை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய உத்தரவிடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்