SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ரசாயனம் கலந்ததாக மீன்கள் பறிமுதல் கும்பகோணம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் திடீர் போராட்டம்

2018-07-12@ 19:29:42

கும்பகோணம்:  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெரியார் மீன் அங்காடி செயல்படுகிறது. சுமார் 40 கடைகள் உள்ளன. நாகை, தஞ்சை, புதுகை மாவட்டங்களில் இருந்து இங்கு தினந்தோறும் மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது. தினமும் ரூ.50 லட்சம் வரை மீன்கள் வியாபாரம் நடைபெறுகிறது.இந்த மீன் மார்க்கெட்டில் கடந்த 9 ம் தேதி  மீன்வளத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இங்குள்ள மீன்களில் ரசாயனம்(பார்மாலின்) சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி 100கிலோவுக்கும் அதிகமான மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

அதிகாரிகள் தங்கள் மீது வீண் பழி சுமத்தி மீன்களை பறிமுதல் செய்தனர்.  ரசாயனம் கலந்ததாக கூறிய அதிகாரிகள் தங்கள் புகாரை வாபஸ் பெற வேண்டும், தவறான புகார் கூறிய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம் மீன்மார்க்கெட் வியாபாரிகள் இன்று திடீரென கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாளைக்கும் ஸ்டிரைக் தொடரும் என அறிவித்து உள்ளனர். மீன் வியாபாரிகள் மீது தவறான புகார் கூறிய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மீன்வியாபாரிகள் சங்க தலைவர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்