SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கச்சா எண்ணெய் விலையை குறைக்காவிட்டால் மாற்றுவழி நாடப்படும்: எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை

2018-07-12@ 17:45:09

டெல்லி: எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என இந்தியா எச்சரித்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக  உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை நாட வேண்டியதிருக்கும் என  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவர் சஞ்சீவ் சிங் கூறியுள்ளார்.இதனால் இனி எரிபொருளுக்கு பதில் எரிவாயு போன்ற மாற்றுவழிகளை  பயன்படுத்தும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டுக்குள் நாள்தோறும் 10 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும் வகையில், இந்தியா மாற்றுவழிகளை நாடும் என்று  தெரிவித்தார். எனவே கச்சா எண்ணெய் விலையை குறைக்க தவறினால், மாற்றுவழிகள் மூலம் கச்சா எண்ணெய் வாங்கும் அளவு குறைக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா மாற்று நடவடிக்கைகளை எடுக்கும்போது கச்சா எண்ணெய் தேவை குறைந்து அதன் தாக்கத்தை எண்ணெய்  ஏற்றுமதி நாடுகள் உடனடியாக உணராவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்