SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார்களில் ஒருவர் சரண்

2018-07-12@ 17:18:11

கொல்லம்: கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரத்தில் பாதிரியார்களில் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார். கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையில் பாவமன்னிப்பு கேட்க வந்த திருமணமான பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாதிரியார்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்களில் ஆப்ரகாம் வர்கீஸ், ஜோப் மேத்யூ, ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜோப் மேத்யூ இன்று காவல்துறை குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்ற பாதிரியார்களும் விரைவில் சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில், ஆப்ரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ் ஆகிய இரு பாதிரியார்களும் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்