SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

2018-07-12@ 16:58:40

புதுடெல்லி: குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத டெல்லி துணை நிலை ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிக அளவிலான குப்பைகள் குவிந்திருப்பது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லியில் அனைத்து அதிகாரங்களும் என்னிடம் தான் உண்டு, நான் தான் சூப்பர்மேன் என்று சொல்லிக்கொள்ளும் துணை நிலை ஆளுநர் ஏன் குப்பைகளை அகற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கில் டெல்லி மாநகராட்சி துணைநிலை ஆளுநரின் மேற்பார்வையில் உள்ளதாக அரசு தரப்பு வாதம் செய்தது.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் பணி என்றும், அதனை கண்காணிப்பதுதான் என்னுடைய பணியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீது குற்றம் சுமத்த முடியாது என்று கூறிய நீதிபதிகள், தாம் தான் பொறுப்பு என்ற போதிலும் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற வகையில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் குப்பையை அகற்றுவது முதல் மந்திரியா அல்லது துணைநிலை ஆளுநரா என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்