SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் உள்ள கடைகளை திறக்க அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற கிளை

2018-07-12@ 16:55:33

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதியில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகியது. மேலும் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபமும் பெருமளவு சேதமடைந்தது. இதனையடுத்து மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டதை எதிர்த்து ராஜ்நாகுலு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எம்.எஸ். ரமேஷ், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்கலாம் என்றும் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே கடைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளார். மேலும் கடைகளை திறப்போர் கடைகளுக்கான வாடகை பாக்கி வைத்திருக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்