இளைஞர்களுடன் போட்டிப் போடும் 70 வயது முதியவர்: தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது இடம்!
2018-07-12@ 16:45:43

விருதுநகர்: தள்ளாடும் வயதில் சாதித்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் இன்பராஜ். உத்வேகத்திலும் ஆர்வத்திலும் இளைஞர்களுடன் போட்டிப் போடும் இந்த முதிய இளைஞர் 2014ம் ஆண்டு மலேசியாவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதியோருக்கான பிரிவில் 4வது இடம்பெற்றவர் ஆவார்.
சென்னை, விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களில் நடந்த முழு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சக ஓட்டக்காரர்களை வியக்கவைத்த இவர், 70 வயதிலும் 5000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டங்களில் பங்கேற்று அனைவரையும் அசத்தி வருகிறார். முன்னாள் உடற்கல்வி இயக்குனரான இந்த முதியவர் நாள்தோறும் விளையாட்டு அரங்கத்திற்கு வந்து பயிற்சி செய்து இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதை முக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறார். இதுவரை எந்த நோயும் தன்னை அணுகவில்லை எனக்கூறும் இந்த முதிய இளைஞர் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன?...ஐகோர்ட் கிளை கேள்வி
அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்?... நீதிபதி சரமாரி கேள்வி
டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார்: அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்
புளியங்குடியில் யானைகள் மீண்டும் அட்டகாசம் : விவசாயிகள் பீதி
மீனவர் வலையில் சிக்கிய 15 டன் கொம்பன் திருக்கை
80 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!