SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பா.ஜ.க., வெற்றிபெற்றால் 'இந்து பாகிஸ்தான்' உறுதி: காங்கிரஸ் எம்.பி சசிதரூரின் பேச்சால் சர்ச்சை

2018-07-12@ 16:12:14

திருவனந்தபுரம்: பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு 'இந்து பாகிஸ்தான்' ஆக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறக்கூடாது என்று வலியுறுத்தினார். ஒரு வேலை வெற்றி பெறுமானால் இஸ்லாம் பாகிஸ்தானை போல சிறுபான்மையினரை ஒடுக்கி இந்தியாவை அவர்கள் இந்து பாகிஸ்தானாக மாற்றி விடுவார்கள் என்று எச்சரித்தார். இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. இப்போது பாராளுமன்ற மேல் சபையில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த நடவடிக்கையை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.

இதனை நடைமுறைபடுத்த அவர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இப்போது அவர்கள் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மேல்சபையில் தங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள். அதோடு சகிக்க முடியாத புதிய அரசியல் சாசனத்தையும் உருவாக்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார். பிறகு காந்தி, நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் கண்ட கனவு எதுவும் நடக்காது என்பதும் சசிதரூரின் எச்சரிக்கை ஆகும். அவரது இந்த பேச்சை பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது. கோடிக்கணக்கான இந்து மக்களின் மனது புன்படும் வகையில் பேசுவதை காங்கிரஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. சசிதரூரின் பேச்சிற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்