SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தடுக்கப்பட்டது

2018-07-12@ 15:52:30

பெங்களூரு: பெங்களூரு வான்வெளியில் 2 இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி, கோவையிலிருந்து ஐதராபாத் புறப்பட்ட ஏர்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த இண்டிகோ நிறவனத்திற்கு சொந்தமான விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும் நேருக்கு நேர் மோத இருந்தது. பல கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த 2 விமானங்களும் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விமானம் அருகில் எதிர்பட்டால் எச்சரிக்ககூடிய TCAS அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறையின் உத்தரவை ஏற்று கொண்ட விமானிகள், ஒரு விமானத்தை 200 அடிக்கு கீழ் பறக்கவிட்டனர். மற்றொரு விமானத்தை மேல் நோக்கி பறக்கவிட்டனர். இதனால் 2 விமானங்களிலும் பயணித்த 328 பேரும், பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர். இச்சம்பவம்
பொதுமக்கள் இடையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்