SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20 நோயாளிகளை மருந்தில் விஷம் கலந்து கொன்ற செவிலியர் : டோக்கியோவில் பயங்கரம்

2018-07-12@ 15:39:23

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள வைத்தியசாலையில் பணியாற்றிய செலிலியர் மருந்தில் விஷம் கலந்து இதுவரை 20 நோயாளிகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அய்யூமி குபோகி என்பவர் செவிலியராக பணிபுரிந்தார். இதையடுத்து அவர்மீது பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து கடந்த 2016ம் ஆண்டு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பணியாற்றிய போது 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோசில் வி‌ஷத்தை செலுத்தி கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.  

இது தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முதியவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 20 நோயாளிகளை இதேபோல் மருந்தில் வி‌ஷம் கலந்து கொன்றதாக அவர் கூறியுள்ளார். அதிகம் தொல்லை தரும் நோயாளிகளை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்த அய்யூமி குபோகியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்