SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழல் செய்தவர்கள் யார்? ஊழலில் திளைத்தவர்கள் யார்? என்று மக்களுக்கு தெரியும்: அமித்ஷாவுக்கு செல்லூர் ராஜூ பதிலடி

2018-07-12@ 15:00:07

மதுரை: ஊழல் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊழல்வாதிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற பாஜக மாநாட்டுக்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம்தான் என்று பேசினார். இந்நிலையில், மதுரை மாவட்டம் மேற்குத் தொகுதியில் அமைந்துள்ள துவரிமான் கண்மாய் தூர் வாரும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ துவங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமித்ஷாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பபட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஊழல் செய்தவர்கள் யார்? ஊழலில் திளைத்தவர்கள் யார்? என்று மக்களுக்கு தெரியும். ஜனநாயக நாட்டில் மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்று கூறியுள்ளார். எனவே தலைவர்களை தேந்தெடுக்க கூடிய மக்கள் இதனை தீர்மானிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவரிமான் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார். மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு தற்போது மிகச்சிறப்பான முறையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருவதாகவும் உரிய நேரத்தில் தூர்வாரப்படுவதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். வைகை அணை விரைவில் தூர் வாரப்படும் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்