SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பையை கைப்பற்றி பிரான்ஸ் மக்களுக்கு வெற்றி பரிசளிப்போம்: பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் உறுதி

2018-07-12@ 14:39:08

மாஸ்கோ: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆட்டத்தில்  தோற்றதற்கு பரிகாரமாக இந்த உலக கோப்பையை வென்று பிரான்ஸ் நாட்டிற்கு பரிசளிக்க  விரும்புவதாக பிரான்ஸ் பயிற்சியாளர்  டெஸ்சாம்ப்ஸ்  கூறியுள்ளார்.உலக கோப்பை கால்பந்து தொடரில்  நேற்று முன்தினம் இரவு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த முதலாவது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  பிரான்ஸ் அணி உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில்  3-வது முறையாக ஆட இருக்கிறது.

இதற்கு முன்னர்  ஏற்கனவே 1998ல் சாம்பியன் ஆனது. அடுத்து 2006-ல்  2-வது இடம் பிடித்தது. இந்த நிலையில் பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் நிருபர்களிடம் கூறுகையில் ‘இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மிகப்பெரிய கவுரவமாகும். வீரர்களின் வெற்றி வேட்கைக்குரிய மனநிலையை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் தோற்றதன் வேதனை இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதற்கு பரிகாரமாக 15ம் தேதி  நடக்கும் இறுதிப்போட்டியில் வெற்றியை ருசிக்க விரும்புகிறோம். பிரான்ஸ் மக்களுக்கு  பரிசாக்கி இதை விட இன்னும் மகிழ்ச்சியை அளிக்க முயற்சிப்போம்’ என்றார்.

சிறந்த அணியிடம் நாங்கள் தோற்கவில்லை
பெல்ஜியம் அணியின்  கோல்கீப்பர் கோர்ட்டுவா கூறுகையில், பிரான்ஸ் அணி-யின் ஆட்டம் வெறுப்பேற்றும் வகையில் இருந்தது. 40 மீட்டர் தூரம் வரை 11 வீரர்களையும் நிறுத்தி தற்காப்பு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். எங்களை விடவும் சிறந்த அணியிடம் நாங்கள் தோற்கவில்லை. ஒன்றுமே விளையாடாமல் தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்திய அணியிடம் தோல்வியடைந்தோம் என்பது வேதனையாக உள்ளது. பெல்ஜியம் வெற்றி பெறாதது கால்பந்து விளையாட்டுக்கு அவமானகரமானது  என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்