SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் கமல்ஹசன்

2018-07-12@ 14:08:53

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் பெயரை கமல் அறிவித்தார். மக்கள் நீதி மய்ய தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்ய துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக சுரேஷ் மற்றும் பொதுச்செயலாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் செயற்குழு உறுப்பினர்களையும் கமல்ஹாசன் அறிவித்தார்.

தற்காலிக உயர்நிலைக்குழு கலைப்பு

மக்கள் நீதி மய்ய கட்சியின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்பட்டது.

தொகுதி வாரியாக நிர்வாகிகள்

சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை கமல் நியமித்துள்ளார். இரண்டு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு உறுப்பினரை கமல் நியமித்துள்ளார்.

செயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு


ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ண குமார், மவுரியா, குமரவேல் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சவுரிராஜன், ஆர்.ரங்கராஜன், ஆர்.தங்கவேலு, மூர்த்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னிப்பு கோரினார் கமல்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கோரினார். கமல் நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்