SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூக்குத்தண்டனை: அதிபர் சிறிசேனா ஒப்புதல்

2018-07-12@ 09:13:36

கொழும்பு: இலங்கையில் கடந்த 1976ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியன்று கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, தூக்கு தண்டனை அளித்தாலும் நிறைவேற்றியதில்லை. தற்போது, ஆயிரம் தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் 950 பேர் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து 3 கொலைகள் நடந்துள்ளன. 160 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்டனை கைதிகளும் சிறையில் இருந்தபடியே, குற்றத்துக்கு காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அதிபர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 19 கைதிகளை தூக்கிலிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றி, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித்ததும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடங்கும் என அமைச்சர் ரஜித சேனாரத்னா தெரிவித்தார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்