SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் 3 நாட்களாக நடைபெற்ற டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

2018-07-12@ 08:05:31

சென்னை: சென்னையில் ஹிந்துஸ்தான், பாரத் பெட்ரோலிய முனையங்களில் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. வாடகை உயர்வுக்கோரி பெட்ரோல், டீசல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் 3  நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்துஸ்தான் பெட்ரலேியம் கார்பரேஷன் நிறுவனம் தொடர்நத வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்தது. வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில், வாடகை ஒப்பந்தப்புள்ளி மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவில் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் அதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மாநில அளவில் டெண்டர் நடத்தப்பட்டால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி டேங்கர் லார் உரிமையாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தில் 4,500 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்து. டேங்கர் லாரிகளின் திடீர் ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதித்தது. இதனை அடுத்து டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்