SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினமும் பல நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற நேரமில்லையா? : இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி

2018-07-12@ 02:12:03

சென்னை : தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு, முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் ஜனவரி 18ம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தது தொடர்பாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டதுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்று புதிய மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகிறது. அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை.  கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனுதாக்கல் செய்ததும் தவறானது என்று கூறி விசாரணையை  ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்