SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரைவு திட்டம் தயார் பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம்

2018-07-12@ 02:02:17

புதுடெல்லி : பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசின் நீதித்துறை தெரிவித்துள்ளது. பலாத்கார சம்பவங்களை முடிவு கட்டும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தின் ஒரு பகுதியாக பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு தற்போது தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. மத்திய உள்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு இதற்கான வரைவு திட்டத்தை அதிகாரிகள் குழு தயாரித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாலியல் பலாத்கார குற்றங்களை விரைந்து விசாரிக்கும் விதமாக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயார் நிலையில் உள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வரைவு திட்டம் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்