SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடுக்கி அருகே காட்டு யானை மிதித்து தமிழக வாலிபர் பலி : மனைவி, குழந்தை உயிர் தப்பினர்

2018-07-12@ 01:52:12

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டு யானை மிதித்து தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மதுரையை   சேர்ந்தவர் குமார். கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள சாந்தன்பாறையில் ஒரு  சுற்றுலா விடுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இவர்  மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ள  வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலை  வீட்டில் இருந்து மனைவி  மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா  விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே காட்டு  யானை வந்தது. அதை பார்த்ததும் இவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால் அந்த யானை  குமாரை பிடித்து மிதித்து கொன்றது. அவரது மனைவியும், குழந்தைகளும்  நூலிழையில் உயிர் தப்பினர். தகவல் அறிந்து போலீசாரும்,  வனத்துறையினரும்  சம்பவ இடதுக்குச் சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி  வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்