SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலை கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்

2018-07-12@ 01:50:51

சென்னை: சிலை கடத்தலை தடுக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறும் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை நீதிபதி மகாதேவன் தொடர்ந்து விசாரித்து வருகிறார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை நீதிபதி ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது, யானை ராஜேந்திரன், நாகப்பட்டினம் கோனேரிராஜபுரம் கோயிலில் ஏராளமான சிலைகள் உள்ளன. இவற்றில், அன்னபூரணி சிலை மாயமாகியுள்ளது. த.ஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கும் கல்லணை சாலைக்கும் இடையே உள்ள செந்தலை கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பாதுகாப்பில்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 70 வயது மூதாட்டி சுந்தராம்பாள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

அப்போது, மற்றொரு மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, “சிலை கடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளபோதே சிலை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் மாயமாகியுள்ளன. மர வேலைப்பாடுகள் சிதைக்கப்படுவதும், பழங்கால பொருட்கள் திருடப்படுவதும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக இமெயில் மூலம் பலமுறை இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்றார். இதைக்கேட்ட நீதிபதி, “வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சிலைகள் கடத்தப்படுவது நடைபெற்று வருவதாக எனக்கும் புகார்கள் வருகின்றன.  அண்ணாமலையார் கோயிலில் பஞ்சலோக சிலை திருடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது. சிலை கடத்தல் தொடர்வது என்பது தமிழக அரசின் மோசமான, நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. இந்த தமிழ்மண்ணில் பாரம்பரியமிக்க, புராதன சிலைகள் கடத்தல் தொடருவதை இந்த நீதிமன்றம் கண்களை மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. சிலை திருட்டுகளை தடுக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால்  சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிட நேரிடும்” என்று எச்சரித்தார்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 • sriramayanatrain

  புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

 • kajapuyal_roof111

  திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

 • 16-11-2018

  16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்