SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலக்கொத்தளம் கல்லறை பகுதியில் திட்டப் பணிகள் பேரவையில் அளித்த உறுதிமொழிக்கு எதிரான மிகப் பெரிய ஏமாற்று வேலை: வைகோ

2018-07-12@ 01:49:17

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:  மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும்  வருகிறது. இந்த மயானத்தைச் சுற்றிப் புதிதாக உருவாகி இருக்கின்ற அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர், இந்தச் சுடுகாட்டை அகற்றுவதற்காக, அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஏன் தமிழக அரசையும் சரிக்கட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளனர். இது ஆதி திராவிட மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய அநீதி ஆகும்.

சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளுக்கு எந்த ஊறும் விளைவிக்காமல் இருப்பதே எங்கள் கடமை என்று கூறிவிட்டு, மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது கல்லறைக்கு மிக அருகாமையில் மூன்று மீட்டர்கூட இடைவெளி விடாமல், கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே திட்டப் பணிகளைத் தொடங்கி உள்ளது சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கு எதிரான மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

மூலக்கொத்தளம் சுடுகாட்டை இடித்து, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்கள் வாழும் தகுதியான பகுதியில் நல்ல தரமான குடியிருப்புகளை அமைத்துத்தர வேண்டும். இல்லையேல், உணர்ச்சிக் கொந்தளிப்பான அறப்போரைச் சந்திக்க நேரிடும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்