SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவரம் அசிசி நகரில் குடியிருப்புகள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க வேண்டும்: நிர்வாக இயக்குனரிடம் திமுக எம்எல்ஏ மனு

2018-07-12@ 01:47:47

திருவொற்றியூர்: மாதவரத்தில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பாதையமைக்கும் பணி 85 ஆயிரம் கோடி செலவில் விரைவில் நடைபெற  உள்ளது. இதற்காக, மாதவரம் அசிசி நகர் 5வது தெரு முதல் 10வது தெரு வரை மற்றும் பால்பண்ணை, தபால்பெட்டி போன்ற பகுதிகளில் உள்ள தனியார் நிலங்கள் ஆர்ஜிதம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சுமார் 200 வீடுகளும், பூங்கா, தேவாலயம், கோயில் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கூறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ மெட்ரோ ரயில் திட்டம் நடைபெற உள்ள பகுதிகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டார். பின்னர், அசிசி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கோயம்பேட்டிலுள்ள மெட்ரோ ரயில் பாதை திட்ட நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சாலை சந்தித்து குடியிருப்புகள் பாதிக்காத வகையில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்’’ என மனு அளித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்