தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தொழில்துறை வளர்ச்சியடைய போவதில்லை : ராமதாஸ் குற்றச்சாட்டு
2018-07-12@ 01:46:54

சென்னை: ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சியடையப் போவதில்லை. பினாமி ஆட்சி நீடிக்கும் வரை ஊழல் ஒழியப் போவதில்லை. விரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை 2017ம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. தமிழகம் 90.68 சதவீதம் சீர்திருத்தங்களை மட்டுமே செய்ததால்தான் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள சீர்திருத்தங்களை தமிழகத்தால் செய்ய முடியாமல் போனதற்கு காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் என்பதைத்
தவிர வேறல்ல.
தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை பினாமி ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால்தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு செல்கின்றனர்.
தொழில்துறையில் தமிழகம் அடைந்து வரும் பின்னடைவு வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்திருக்கிறது. தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை.
பினாமி ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப்போவதில்லை. எனினும், வெகுவிரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
பிரதமராக மோடி இருப்பதால் பாஜ.வுக்கு அறிவுரை தேவையா? : ப.சிதம்பரம் காட்டம்
மக்களவை தேர்தல் பிரசாரத்தை கர்நாடகாவில் இருந்து துவக்குகிறார் ராகுல்
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்சை டயர்நக்கிகள் என பேசியவருடன் மானங்கெட்ட கூட்டணி : டிடிவி விமர்சனம்
எடப்பாடி அரசை காப்பாற்றவே பாஜவுடன் உறவு : அன்வர்ராஜா எம்பி பேட்டி
அதிமுக - பாமகவை மக்கள் புறக்கணிப்பார்கள் : திருமாவளவன் பேட்டி