SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதகமாகவே தமிழக அரசு செயல்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

2018-07-12@ 01:44:02

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதகமாகவே தமிழக அரசு செயல்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழில் 24,072 பேர் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் 196 மதிப்பெண் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், எல்லா மாநிலங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் தரவரிசைப்பட்டியல் மாறினால் எல்லா மாநிலங்களும், அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கை மீண்டும் நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 2 வாரத்தில் புதிய தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால், தமிழில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு டாக்டர் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பெற்றோரும், மாணவர்களும் நீதிமன்றம் அறிவித்த படி இடம் கிடைக்குமா, கிடைக்காதா? என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகரில் விழிப்புணர்வு ேபரணியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதகமாகவே தமிழக அரசு செயல்படும். மாணவர்களை தேவையில்லாமல் குழப்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

50 லட்சத்தில் நினைவு வளைவு

எழும்பூர் கண் மருத்துவமனை 200வது ஆண்டு துவக்க விழா நேற்று காலை நடந்தது. கண் தானம் குறித்த உறுதி மொழியை செவிலியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். 200வது ஆண்டை முன்னிட்டு கல்வெட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: கண்தானம், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எழும்பூர் கண் மருத்துவமனையில் பலருக்கு மறுஒளி வழங்கப்பட்டுள்ளது. இந்த 200வது ஆண்டை கொண்டாடும் வகையில் 50 லட்சம் செலவில் நினைவு வளைவு அமைக்கப்படும். உயர் நீதிமன்ற மதுரை கிளை நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இக்கு உத்தரவு வழங்கியுள்ளது. சிபிஎஸ்இயின் நடவடிக்கையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்