SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத இடங்கள்

2018-07-12@ 01:39:44

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19 கல்வியாண்டில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளது. கல்லூரிக்கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டதால், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதல் இடங்களை சேர்ப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப, 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், இந்துசமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடம் தேவையுள்ள பாடப்பிரிவுகளில் 15 சதவீதம் கூடுதல் இடங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளவும், அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 15 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து அரசு அணையிடுகிறது. இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்காக கல்லூரிகள் தாங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்