SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ 3 சலுகைகள்

2018-07-12@ 01:24:11

சென்னை : பஜாஜ் ஆட்டோ நிறுவனம்,  இலவச காப்பீடு உட்பட 3 சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பஜாஜ் ஆட்டோ, 3 இன் 1 ஹாட்ரிக் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 1ம் தேதி துவங்கிய இந்த சலுகை இந்த மாதம் 31ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். முதலாவது சலுகையாக, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் 150, பல்சர் என்எஸ்160, வி ரக மோட்டார் சைக்கிள் வாங்குவோருக்கு ஓராண்டு இலவச காப்பீடு கிடைக்கும்.

2வது சலுகையாக, புதிய சிடி100, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் என்எஸ், அவெஞ்சர், பல்சர் ஆர்எஸ், டாமினார் ரக பைக் வாங்குவோருக்கு 2 ஆண்டு இலவச சேவை கிடைக்கும். மூன்றாவது சலுகையாக, எந்த பஜாஜ் வாடிக்கையாளராக இருந்தாலும், மேற்கண்ட கால அளவுக்குள் முதல் முறையாக கூடுதல் செலவு ஏதுவும் இன்றி 5 ஆண்டு வாரண்டி தொகுப்பு பெறலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து பஜாஜ் டீலர்களிடமும் இந்த சலுகை கிடைக்கும். இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மோட்டார் சைக்கிள் பிசினஸ் தலைவர் எரிக் வாஸ் கூறுகையில், ‘இந்த புதிய திட்டங்கள் மழைக்காலத்தில் எங்கள் விற்பனையை பெருக்க உதவும்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amerika_12

    இயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்

  • kochi_fire11

    கொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எரிந்து நாசம்

  • modi_varanasi11

    நரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு

  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்