SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்சை பின்னுக்கு தள்ளியது பொருளாதார வளர்ச்சியில் 6வது இடத்தில் இந்தியா : உலக வங்கி தகவல்

2018-07-12@ 01:15:50

புதுடெல்லி : இந்தியா பொருளாதாரம் உலக அளவில் 6வது இடத்தை பிடித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக பொருளாதாரம் குறித்து உலக வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 2017ம் ஆண்டில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த இடத்தில் இருந்த பிரான்ஸ் 7வது இடத்துக்கு சென்றுவிட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 2.59 லட்சம் கோடி டாலர். பிரான்ஸ் ஜிடிபி மதிப்பு 2.58 லட்சம் கோடிடாலர். முதலிடத்தில் அமெரிக்கா நீடிக்கிறது. இதன் ஜிடிபி 19.36 லட்சம் கோடி டாலர்.

இதற்கு அடுத்த இடங்களில் சீனா (2), ஜப்பான் (3), ஜெர்மனி (4) உள்ளன. 5வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. அடுத்த ஆண்டு இந்த இடத்தை இந்தியா பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. பிரேசில் (8), இத்தாலி (9), கனடா (10)வதுஇடங்களை பிடித்துள்ளன. பிரான்ஸ் பின்னுக்கு சென்றாலும், அதன் மக்கள் தொகை 6.7 கோடி மட்டுமே. ஆனால் இந்திய மக்கள் தொகை 135 கோடி. இத்துடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருவாய் பிரான்சில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்