SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருவண்ணாமலையில் பசுமைச்சாலைக்காக ஒரே நாளில் 12 கிராமங்களில் நிலம் மதிப்பிடும் பணி : விவசாயிகளுக்கு நோட்டீஸ் அளிக்க ஏற்பாடு

2018-07-12@ 00:56:08

திருவண்ணாமலை : சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 கிராமங்களில் நிலம் மதிப்பிடும் பணி நடந்தது. அதன் விவரங்கள் அடிப்படையில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னை- சேலம் இடையே 277 கிமீ தொலைவில் அமையும், 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமைச்சாலை அமையும் 122 கிமீ தொலைவில் உள்ள 92 கிராமங்களில் நிலம் அளவீடு செய்து, எல்லை குறியீடு கற்கள் பதிக்கும் பணி முதற்கட்டமாக முடிந்துவிட்டது. அதைத்தொடர்ந்து, பசுமைச் சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில், உட்பிரிவு சர்வே விபரம் அடிப்படையில் துல்லிய அளவீடு, நிலத்தில் உள்ள கிணறு, கட்டிடங்கள், மரங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

வந்தவாசி தாலுகாவில் இஞ்சிமேடு, மகாதேவிமங்கலம், தெல்லாரம்பட்டு, கலசபாக்கம் தாலுகாவில் தென்னகரம், தென்பள்ளிப்பட்டு, செங்கம் தாலுகாவில் மேல்பள்ளிப்பட்டு, அந்தனூர், பெரும்பட்டம், மண்மலை, ஓரந்தவாடி, சேத்துப்பட்டு தாலுகாவில் செம்மாம்பாடி, கோணாமங்கலம் ஆகிய 12 கிராமங்களில் நிலம் மதிப்பிடும் பணி நேற்று நடந்தது.மேலும், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உட்பிரிவு சர்வே அடிப்படையில் அளவீடு, மதிப்பிடும் பணிகள் முடிந்ததும், அதன் விபரங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என இத்திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நிலஎடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் நோட்டீசில், எந்த சர்வே எண்ணில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது, அதன் சந்தை மதிப்பு மற்றும் வழிகாட்டி மதிப்பு போன்ற விபரங்கள் இடம் பெறும் என தெரிவித்தனர். மேலும், நிலம் எடுக்க ஆட்சேபனை மனுக்கள் அளிக்க, வரும் 25ம் தேதி வரை அவகாசம் நீட்டித்திருப்பதால், அதன் பிறகு இந்த பணிகள் தொடங்கும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்