SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விம்பிள்டன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்: பெடரர் அதிர்ச்சி தோல்வி

2018-07-12@ 00:18:18

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியுடன் (24வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (12வது ரேங்க்) 6-3, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இப்போட்டி 2 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் 8 முறை சாம்பியனும் நம்பர் 1 வீரருமான ரோஜர் பெடரர் (சுவிஸ்), தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை (8வது ரேங்க்) எதிர்கொண்டார். முதல் செட்டை 6-2 என எளிதாக வென்ற பெடரர், டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த 2வது செட்டில் 7-6 (7-5) என வென்று முன்னிலை பெற்றார்.

அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த ஆண்டர்சம் 7-5, 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்து விடாப்பிடியாக முன்னேறினர். இதனால் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க முடியாமல் மாரத்தான் மரணப் போராட்டமாக அமைந்த இந்த செட் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போனது. களத்தில் மல்லுக்கட்டிய வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களையும் பதற்றத்தில் பதற வைத்த இந்த செட்டில் ஆண்டர்சன் 13-11 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு  முன்னேறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்