SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

டிஎன்பிஎல் டி20 தொடரில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

2018-07-12@ 00:17:24

புதுடெல்லி: டிஎன்பிஎல் டி20 தொடரில் விளையாட வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சார்பில் நடத்தப்படும் இந்த தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக்சூப்பர் கில்லீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் வெளி மாநிலங்களை சேர்ந்த 2 வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு சார்பில் டிஎன்சிஏவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலிில் ‘வெளிமாநில வீரர்களை டிஎன்பிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பது விதிகளை மீறிய செயல்.

அதுமட்டுமின்றி டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தவும் அனுமதியில்லை’ என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இதை எதிர்த்து டிஎன்சிஏ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதி அளிக்க முடியாது. அதே சமயம் டிஎன்பிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்தலாம்’ என்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்