SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொடக்கம் நாட்டிங்காமில் முதல் ஒருநாள் போட்டி இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை: மாலை 5.00 மணிக்கு தொடக்கம்

2018-07-12@ 00:16:46

நாட்டிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளதால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த தொடரில் இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று ஒயிட்வாஷ் செய்துள்ளதால், மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மேலும், வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அந்த அணி தொடர்ச்சியாக 300+ ஸ்கோர்களை விளாசி வருவதால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்துவது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் - யஜுவேந்திர சாஹல் கூட்டணி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

இந்திய அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சம் இல்லை என்பதால், இப்போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். டோ2015 உலக கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 46 வெற்றி, 19 தோல்வி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியா 39 வெற்றி, 19 தோல்வி கண்டுள்ளது. டோனி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன் மைல் கல்லை எட்ட இன்னும் 33 ரன் மட்டுமே தேவை.

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), தவான், ராகுல், ரோகித், ரெய்னா, கார்த்திக், டோனி, ஹர்திக், ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் பட்டேல், குல்தீப், சாஹல், சித்தார்த், புவனேஷ்வர், உமேஷ், ஷர்துல் தாக்கூர்.

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), மொயீன், ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜேக் பால், பட்லர், டாம் கரன், ஹேல்ஸ், பிளங்கெட், ஜோ ரூட், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்