SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜப்பான் மழை பலி 179 ஆனது

2018-07-12@ 00:12:01

டோக்கியோ: ஜப்பானில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 30  ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த கனமழை பெய்து வருவதால் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 75 ஆயிரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், முகாம்களில் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒகயாமா உள்ளிட்ட மாகாணங்களில் மழையால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளால், பலியானோர் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே விமானம் மூலம் நேற்று பார்வையிட்டார். பின்னர், முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்