SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யா கட்டுப்பாட்டில் ஜெர்மனி இருக்கிறதா? பிரதமர் ஏஞ்சலா டிரம்புக்கு பதில்

2018-07-12@ 00:10:45

பிரஸ்சல்ஸ்: ‘ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஜெர்மனி இயங்கவில்லை’ என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஜெர்மனி இயங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் குற்றம்சாட்டினார். மேலும், ஜெர்மனியில் நடக்கும் எரிவாயு குழாய் பதிப்பு பணிக்கு ரஷ்யாவையே அவர்கள் சார்ந்துள்ளதாகவும்  தெரிவித்தார். இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நடைபெறும்  நேட்டோ கூட்டமைப்பு மாநாட்டுக்காக வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், அங்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஜெர்மனி செயல்படவில்லை. நாங்களே சுதந்திரமான முடிவை எடுக்கிறோம்.

சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மனியில் வளர்ந்தவள் நான். இன்று ஜெர்மனி சுதந்திர அரசாக உருவாகி இருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன். தற்போது, நாங்களே சுதந்திரமான கொள்கைகள் மற்றும் சுயமான முடிவை எடுக்க முடிகிறது. நேட்டோவுக்கு ஜெர்மனி அதிகம் கடமைப்பட்டு இருக்கிறது. நேட்டோ படைக்கு அதிகளவு வீரர்களை வழங்கும் நாடுகளில் 2வது இடம் எங்களுக்கு உள்ளது  என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்