SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் தேர்தல் பிரசாரத்தில் 20 பேர் படுகொலை: 50 பேர் படுகாயம்

2018-07-12@ 00:06:29

பெஷாவர்:  பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் அவாமி தேசிய கட்சி வேட்பாளர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  பாகிஸ்தானில் வரும் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரில் உள்ள யாகாதூத் பகுதியில் அவாமி தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரம் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் அங்கு திரண்டனர். அப்போது, கட்சியின் மூத்த தலைவரும், 78வது தொகுதி வேட்பாளருமான  பஷிர் பிலார் மேடைக்கு வந்தார்.

அவரை வரவேற்க, தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது, அங்கிருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில், பிலார் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்ெகாலைப் படை தாக்குதலில் பிலார் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு 8 கிலோ வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது, பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் நடத்தப்பட்ட 2வது பெரிய தாக்குதலாகும். இந்த மாத தொடக்கத்தில் கேபிகே மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வேட்பாளர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்