SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

66 ஆண்டு வளர்த்த முதியவர் உலகின் நீளமான நகத்தை விழா நடத்தி வெட்டினார்

2018-07-12@ 00:05:34

நியூயார்க்: கடந்த 66 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்து வந்த விரல் நகத்தை புனேவைச் சேர்ந்த 82 வயது முதியவர், அமெரிக்க மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் வெட்டினார்.  மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சிலால் (82). இவர் கடந்த 1952ம் ஆண்டிலிருந்து தனது இடது கை விரல்களில் நகத்தை வெட்டவில்லை. இவரது பெருவிரல் நகம் மட்டும் 197.8 செமீ நீளம் வளர்ந்தது. இடது கை விரல்களில் உள்ள நகங்களின் மொத்த நீளம் 909.6 செமீ. உலகில் இதுவரை யாரும் இந்த அளவு நீளத்துக்கு நகம் வளர்க்கவில்லை. இதனால், இவரது நகம் 2016ல் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது.

இவர் தனது நகத்தை வெட்டி மியூசியத்தில் பாதுகாக்க விரும்பினார்.  இதற்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ‘ரிப்ளேஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ மியூசியம் முன்வந்தது. இதற்காக புனேவிலிருந்து நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் ஸ்ரீதர். இவரது நகத்தை வெட்டுவதற்காக மியூசியத்தில் ‘நகம் வெட்டும் விழா’ நேற்று நடத்தப்பட்டது. அதில், ஸ்ரீதரின் நகங்கள் வெட்டப்பட்டு மியூசியத்தில் வைக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்