SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் அமித்ஷா பார்லி. தேர்தலுக்கு தயாராகிறது பாஜ

2018-07-11@ 19:15:24

* பாட்னாவில் நிதிஷ்குமாருடன் நாளை சந்திப்பு
* டின்னர் பார்ட்டிக்கு தடபுடல் ஏற்பாடு

பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளை வீழ்த்த பாஜ தயாராகிறது. இதற்காக, பாஜ தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரை அமித் ஷா சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளார். அமித் ஷா-நிதிஷ்குமார் சந்திப்பை முன்னிட்டு பாட்னாவில் தடபுடல் டின்னர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004-2014 வரை 10 ஆண்டு நாட்டை ஆட்சி செய்தது. இந்த ஆட்சியில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாகவும், 10 ஆண்டுகளில் எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை என கூறி 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜ பரபரப்புரை செய்தது. அப்போது, குஜராத் முதல்வராக இருந்த மோடியை, பாஜ பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் திடீரென வெளியேறியது. அப்போது நிதிஷ்குமார், ‘மோடி ஒரு மதவாதி. அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது’ என்று குற்றம்சாட்டினார்.

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசியதால், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜவுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக, 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, மெகா கூட்டணியை அமைத்தார் நிதிஷ்குமார். அங்கு, நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் முதல்வரானார். சில மாதங்களே தொடர்ந்த இந்த கூட்டணியில் இருந்து, மீண்டும் பாஜவுக்கு தாவினார் நிதிஷ்குமார். இதை, அப்போது கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் இன்றும் கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், பாஜ தலைமையிலான ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான், பிரதமர் மோடி மற்றும் பாஜ தலைவர் அமித் ஷாவின் மிகப் பெரிய இலக்காக உள்ளது. இதற்கு, பீகாரில் நிதிஷ்குமார் உதவலாம் என்பது பாஜவின் கணக்கு. சமீபத்தில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சி கூட்டணியை உடைக்க, அதற்கான வேலைகளை பாஜ துவங்கிவிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பீகாரின் 40 தொகுதிகளில், 22 தொகுதிகளில், பாஜ வென்றது. கூட்டணிக் கட்சிகள், 9 தொகுதிகளில் வென்றன. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், அதிக இடங்களில் போட்டியிட விரும்பும் நிதிஷ்குமாரை தன்வசப்படுத்த, பாஜ போட்டியிடும் தொகுதிகள் குறைத்து, கூட்டணியை வலுப்படுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜவுடன் நிதீஷ்குமார் கூட்டணி வைத்தபின், முதன்முறையாக இருவரும் நாளை பாட்னாவில் சந்திக்கின்றனர். இதற்காக, இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பெரிய அளவிலான விருந்துக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை தொடர்வது மற்றும் ெதாகுதி பங்கீடுகள் குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் ெதரிவிக்கின்றன. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்,  ‘தொகுதி பங்கீடு குறித்து இப்போது பேசவில்லை, மூத்த மற்றும் இளைய  சகோதரர்கள் சந்தித்துக் கொள்கின்றனர்’ எனக்கூறினர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்கை மாநில ஆதரவு கட்சிகளுடன் பாஜ தொடங்கியுள்ளது. ேநற்று முன்தினம் தமிழகம் வந்த அமித் ஷா, ஆளும் அதிமுக அரசை சாடும் வகையில், நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊழல் அதிகம் நடப்பதாக கூறினார். ஆனால் அதிமுகவாவோ, மறைமுகமாக பாஜவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, ஆட்சியை தக்கவைத்து வருகிறது. அதனால், அதிமுக - பாஜ கூட்டணி அமையுமா அல்லது அதிமுகவை பாஜ கழற்றிவிட்டு புதியதாக சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளை துவக்கி வைக்க அமித் ஷா சென்னை வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாம் ஓட்டு கணக்கு
கடந்த 2015ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில், ஆட்சியை அமைக்க முடியாவிட்டாலும், அதிக ஓட்டு சதவீதம் பெற்ற கட்சியாக பாஜ உள்ளது. அந்தக் கட்சிக்கு 24.8 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. லாலு கட்சிக்கு 18.5 சதவீதமும், நிதிஷ்குமாருக்கு 16.7 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு, 6.7 சதவீதம் ஓட்டுகள் தான் கிடைத்தன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 38.8 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இதில், பாஜவுக்கு மட்டும் 29.4 சதவீத ஓட்டுகள். கடந்த 2015 சட்டசபை தேர்தலில், ேதசிய ஜனநாயக கூட்டணிக்கு 34 சதவீத ஓட்டுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்