SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவாரம் மலையடிவாரத்தில் காட்டு யானை களமிறங்கியதால் 50 தென்னை மரங்கள் நாசம்

2018-07-11@ 12:35:18

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ளநிலங்களில் ஒற்றையாக திரியும் காட்டுயானை 50 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தது. தேவாரம் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மலையடிவாரத்தில் ஒற்றையாக பெண் யானை திரிகிறது. இது தினந்தோறும் விளைநிலங்களையும், பயிர்களையும் நாசம் செய்கிறது. இதனை மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மலையடிவாரத்தில் பலநூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கப்பை, தட்டை, நிலக்கடலை, தக்காளி, உள்ளிட்ட பயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது.

இந்த யானையை விரட்டினாலும் மீண்டும், மீண்டும் தோட்ட பகுதிகளுக்கு வந்து நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. தேவாரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சி.கே.மணி என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் காலையில் புகுந்த காட்டு யானை அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒடித்து குருத்துக்களை மட்டும் சாப்பிட்டுள்ளது. மேலும் பல மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தது. தொடர்ந்து அருகில் உள்ள நிலக்கடலை, வாழை உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளது.

இதனால் விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். யானையை பிடிக்க தேவையான நடவடிக்கையில் வனத்துறையினர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், தினமும் அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் விளைந்த பயிர்களை காப்பாற்ற முடியாத அவலம் தொடர்கதையாகிவிடும். வனத்துறையினர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்