SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

என்ன சொல்கிறார்கள் மக்கள்... ஊரெல்லாம் நெரிசல்...

2018-07-11@ 10:55:18

சாந்தி பச்சையப்பன்( தனியார் நிறுவன அலுவலர்):

மக்கள் தொகை பெருக்கத்தால் வேலை கிடைப்பது பெரும்பாடாகி விட்டது. அது நிறுவனங்களுக்கு வசதியாகி விட்டது. குறைந்த ஊதியத்துக்கும் ஆட்கள் கிடைக்கிறார்கள். ஒரு வேலைக்கு 30, 40 பேரை தேர்வு செய்து, அதில் சிறந்த ஒருவரை தேர்வு செய்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு குழந்தை பெறுபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கினால் கிராமபுறங்களிலும் மக்கள் தொகை கட்டுக்குள் வரும்.

முனுசாமி ரத்தினம்(தெற்கு ரயில்வே):

மக்கள் தொகை அதிகமாகி விட்டது என்று குறை சொல்லிக் கொண்டு இருக்க கூடாது. இவ்வளவு மனித சக்தியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் மனித சக்தியை முழுமையாக பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுத்தினால் உலகத்துக்கே நாம் உணவளிக்க முடியும். இயற்கையாக விளைவித்தால் வருங்கால சந்ததியும் பயன் பெறும்.

எச்.இராஜலட்சுமி(குடும்பத் தலைவி):

ஒரு குழந்தை பெற்றால் அண்ணன் - தம்பி, சித்தப்பா - அத்தை, சித்தி - மாமா, அக்கா- தங்கை உறவுகள் ஒன்றும் ஒழிந்து விடாது. இந்த தலைமுறை சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளை அண்ணன்- தம்பியாக, அக்கா - தங்கையாக கொண்டாடலாமே. அப்படி செய்தால் மற்ற உறவுகள் தொடர்ந்து நீடிக்கும்.

முனைவர் சி.செல்வகுமார்(தமிழ் பேராசிரியர்):

பாரதியார் 1920ல் 30 கோடி முகங்கள் என்று பாடினான். இன்று 100 ஆண்டுகளில் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. மக்கள் தொகை பெருகினால் இயற்கை வளங்களை அழிக்க வேண்டியிருக்கும். அதனால் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டும். எல்லா மதங்களும் சொல்வதை தவிர்த்து குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

ஜி.அசோகன் (பிலிப்பைன்ஸ்):

மக்கள் தொகை  குறைய வேண்டும்  என்பதற்காக ஒரு குழந்தை போதும் என்பது நல்லதல்ல. அதனால் பகிர்ந்து வாழும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே கிடைக்காமல் போகும். ஒரு குழந்தை பழக்கத்தால் உலகில்  சுயநலமும், போட்டி மனப்பான்மையும் தான் அதிகமாகும். (இவர்கள் அனைவரும் உலக மக்கள் தொகை தினமான  ஜூலை 11ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுபவர்கள்)

- ஆனந்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • georgiyaropecar

  ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

 • chinaindustryexpo

  சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

 • thirupathiseventh

  திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

 • 20-09-2018

  20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்