SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்று பெற்றால் ஒளி மயமா

2018-07-11@ 10:53:31

குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்வதில் அரசுகள்  இப்போதெல்லாம் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அரசு சொல்லாமலே மக்கள் கேட்கின்றனர். கல்யாணம் ஆனதும் உடனே குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. பெற்றுக் கொண்டாலும் ஒன்றுக்கு மேல் பெற்றுக் கொள்வதில்லை. ஆணோ பெண்ணோ ஒன்று போதும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதிலும் பெருநகரங்களில், நகரங்களில் ஆண், பெண் குழந்தை என்ற பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் ‘இந்த பிள்ளை பெற பட்ட அவஸ்தைகள் போதும்.... இன்னொரு அவஸ்தையும் வேண்டாம் பிள்ளையும் வேண்டாம் என்பதுதான். ஆனால் அடுத்த 2வது ஆண்டில் இன்னொரு பிள்ளை பெற்றுக் கொள்ளும் போதும் இதே சபதம், உறுதி எடுப்பார்கள். சபதம் எடுப்பதும் நிற்காது, பிள்ளை பேறும் குறையாது. இந்த பிரசவ வைராக்கியம் இப்போது உறுதியாகி விட்டது.  

அதனால் ஒன்றே எப்போதும் நன்று என்றாகி விட்டது. ஆனால் ஒரு குழந்தை பெற்றால் அதை நன்றாக வளர்க்கலாம், பொருளாதார சிக்கல், ஊதியம் குறைவு, விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு இல்லாது போன்ற பிரச்னைகளினால் ஒன்று பெற்றால் அதை நன்றாக வளர்க்கலாம். ஆனால் அது பெற்றோரின் எதிர்காலத்திற்கு நல்லதா பாதுகாப்பானதா... ஒரு பிள்ளையுடன் நிறுத்திக் கொண்ட பலரிடம் கேட்டோம். பலர் முதல் தலைமுறை என்பதால் இன்னும் அந்த சிரமத்தை அனுபவிக்கவில்லை. ‘இப்போதுதான் படிக்கிறா..., ‘வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள்தான் ஆச்சி..., பொண்ணு தேட ஆரம்பிச்சிருக்கோம்..., ’ என்ற பதில்கள்தான் கிடைத்தன.

ஆனால் போன தலைமுறையில் ஒரு பிள்ளை பெற்றவர்களின் நிலைமை கொஞ்சம் சிரமம்தான். ‘பையன் வெளிநாட்டில் இருக்கிறான்.... நாங்க தனியாக இருக்கோம். பழகிடுச்சி’ என்றனர் சென்னை திநகர் பெற்றோர். ‘பொண்ணுக்கு கல்யாணம்  பண்ணிட்டோம். அவா ஃபேமிலி  திருவான்மியூர்ல இருக்கு. வேலைக்கு பக்கம். முடிஞ்சா மாசத்துக்கு ஒருமுறை வந்து பாத்துட்டுப்போவா’ என்கின்றனர் அம்பத்தூர் பெற்றோர்.
கூடவே இருந்தாலும் சிரமம்தான். பொருளாதார தேவைகளுக்காக ஓடுபவர்களுக்கு பெற்றோருடன் நேரம் கழிக்க முடிவதில்லை. ஆனால் ஒற்றை பிள்ளை பெற்றவர்கள் பெரும்பாலும் காசுக்கு கஷ்டமில்லாமல் இருக்கிறார்கள். ஐந்து பிள்ளை பெற்றும் சாப்பாட்டுக்கு கையேந்தும் நிலையில் இருக்கும் பெற்றோர்களும் உள்ளனர்.

ஆனால் ‘ஒருபிள்ளை என்றால் படிக்க வைக்க, பராமரிக்க, செலவு செய்ய, கல்யாணம் பண்ணி வைக்க, வீடு வாசல் சேர்த்து வைக்க சிரமம் இருக்காது’ என்கின்றனர் இளம் பெற்றோர்கள். ‘ஒரு பிள்ளை பெற்றால் உறியில் சோறு’ என்பது வட மாவட்டங்களில் ஒரு பிள்ளையின் பெருமையை சொல்லும் பழமொழி. ஆனால் ஒரு பிள்ளையாக பிறந்தால் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கலாம். ஆனால் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்ட பெற்றோருக்கு அந்த வசதிகள் கிடைக்குமா என காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

- அனுரேகா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்