SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை கால்பந்தும், மக்கள் தொகையும்

2018-07-11@ 10:50:40

உலககோப்பை கால்பந்து போட்டிகள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளன. உலக கோப்பை போட்டியில் விளையாட கண்டங்கள் வாரியாக தகுதிச் சுற்றில் வென்ற 32 நாடுகள் தேர்வாகின. ஆனால் உலக அளவில் மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் ஒன்று கூட தேர்வாகவில்லை. முதல் 4 இடங்களில் உள்ள சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகியவை உலக கோப்பையில் விளையாட தேர்வாகவில்லை. அதிலும் இந்தியா, இந்தோனேசியா இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையில் விளையாடியதில்லை. அதேநேரத்தில் உலக அளவில் 5வது இடத்திலும், தென் அமெரிக்கா நாடுகளில் முதல் இடத்திலும் இருக்கும் பிரேசில் தொடர்ந்து உலக கோப்பைகளில் விளையாடி வருகிறது.

மேலும் முதல் 20 இடங்களில் உள்ள நாடுகளில் நைஜீரியா(7), ரஷ்யா (9), மெக்சிகோ(10), ஜப்பான்(11), எகிப்து(14), ஜெர்மனி(17), ஈரான்(18), ஆகிய நாடுகள் மட்டுமே உலக கோப்பையில் விளையாடின. இதில் ஜப்பான், ஈரான் ஆகியவை மட்டுமே ஆசிய நாடுகள். அது மட்டுமல்ல கோப்பைக்காக களம் கண்ட எல்லா நாடுகளிலும் இந்தியா, சீனாவை விட மக்கள் தொகை பல மடங்கு குறைவு. பல நாடுகளின் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் குறைவு. பனாமாவில் 41.62 லட்சம், குரேஷியாவில் 41.64 லட்சம், சுவிட்சர்லாந்தில் 85.44 லட்சம் மட்டுமே. அதிலும் ஐஸ்லாந்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை வெறும் 3.5 லட்சம் மட்டுமே. எனவே எண்ணிக்கை மட்டும் கை கொடுத்து விடாது, இருப்பதை முறையாக பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.

- அருண்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்