SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண் பெண் சமமா?

2018-07-11@ 10:42:11

தனி மனிதன், இனம், சமூகம் என அனைவருக்கும் எழுத்தறிவு என்பது முக்கியமான ஒன்றாகும். எழுத்தறிவு என்பது மனித உரிமை. ஜனநாயகத்தில் இருக்க கூடிய வேற்றுமைகளை களையவும், மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் கல்வி அறிவு முக்கியமானதாக இருக்கிறது. இதேபோல், ‘ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது’ என்றார் மகாகவி பாரதியார். எழுத்தறிவு என்பது அனைவருக்கும் சமமானதே. ஆண்களுக்கு ஒரு கல்வியும், பெண்களுக்கு ஒரு கல்வியும் என்று ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. கல்வி அறிவு உள்ள சமூகமே சிறந்த சமூகமாகவும் போற்றப்பபடுகிறது. தற்போது உள்ள காலக்கட்டங்களின் பெண்களின் கல்வி அறிவும், அவர்கள் பல்வேறு துறைகளில் கால்பதிப்பதும் நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே செல்கிறது.

படிப்பில் பெண்கள்தான் எப்போதும் முதலிடத்தை பிடிக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக படிப்பவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. வளரும் சமூகத்திற்கு ஊக்கத்தை அளிக்கும் பெண்களின் கல்வி அறிவு என்பது 1901ம் ஆண்டில் 0.60 சதவீதமாகவும், 2011ம் ஆண்டில் 65.46 சதவீதமாக இருப்பது என்பது பரவாயில்லை. இது அடுத்து வரக்கூடிய 2021ம் ஆண்டுல் 70 சதவீதத்தை தாண்டும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் ஆண்களின் கல்வியறிவை ஒப்பிடுகையில் இது குறைவு என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. ஆண், பெண் சமம் என்பது கல்வியில் நிகழ்ந்தால்தான் சமூகத்தில் சமத்துவம் ஏற்படும்.

110 ஆண்டுகளில் இந்திய ஆண், பெண்களின் கல்வியறிவு விகிதம்

வரிசை எண்             கணக்கெடுப்பு ஆண்டு    மொத்தம்(%)        ஆண்(%)     பெண்(%)

1        1901        5.35        9.83    0.60
2        1911        5.92        10.56    1.05
3        1921        7.16        12.21    1.81
4        1931        9.50        15.59    2.93
5        1941        16.10        24.90    7.30
6        1951         16.67        24.95    9.45
7        1961        24.02        34.44    12.95
8        1971        29.45        39.45    18.69
9        1981        36.23        46.89    24.82
10        1991        42.84        52.74    32.17
11        2001        64.83        75.26    53.67       
12        2011        74.04        82.14    65.46

- வி.அய்யனார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்