SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் புனித நாடு

2018-07-11@ 10:29:58

உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளாக சீனா, இந்தியா ஆகியவை தொடர்வது போல் உலகின் மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பது வத்திக்கான். இங்கு 801 பேர் மட்டுமே வசிப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதனால் உலகில் உள்ள 233 நாடுகளில் மக்கள் தொகை அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கிறது. மக்கள் எண்ணிக்கை மட்டுமல்ல, நிலபரப்பும் சிறியதுதான். மொத்தம் 44 ெஹக்டர். அதாவது சுமார் 110 ஏக்கர். அளவில், எண்ணிக்கையில் கடைசியில் இருந்தாலும் உலகின் முக்கிய நாடாக இருக்கிறது வத்திக்கான்.

உலகில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் தலைமை பீடம். ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளை ஆரம்ப காலம் முதல் நடத்தி வரும் ேஹாலி சீ எனப்படும் சுயாட்சி பெற்ற திரு ஆட்சிப்பீடம் இங்கிருந்துதான் செயல்படுகிறது. இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகருக்குள் இந்த வத்திக்கான் நாடு அமைந்துள்ளது. அங்குள்ள திருத்தூதரக அரண்மனையில் தான் போப் தங்கியுள்ளார். இந்த அரண்மனை 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

வத்திக்கானில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், அருங்காட்சியகங்கள், பண்பாட்டு மையங்கள், கலைக்கூடங்கள், காப்பகங்கள் உள்ளன. இதில் பேதுரு ஆலயம் 1600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வத்திக்கானில் உள்ள 801 மக்களை குடிமகன்கள் என்று சொல்வதை விட வசிப்பவர்கள் என்றே சொல்லலாம். இவர்கள் குருமார்கள், நிர்வாக பணிகள் செய்ய, மதக்கல்வி கற்க வந்தவர்கள். இப்படி மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் வத்திக்கானுக்கு ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புனித சுற்றுலா வருகின்றனர்.

- ஏஆர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்