SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள்தொகை குறைவதால் பலன்கள் யாருக்கு?

2018-07-11@ 10:15:25

நாட்டின் பொருளாதார வசதி உயர்கிறதோ இல்லையோ, வளர்ச்சிக்கு ஆப்பு வைக்கும் மக்கள் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும்‘அதிகம் பெற்றால் அல்லல்மயம் ஒன்று பெற்றால் ஒளிமயம்’ என்று மாறிவிட்டது. ஆணோ பெண்ணோ ஒன்றுக்கு மேல் குழந்தை பெறுவது அரிதாகி விட்டது. அப்படியும் நாட்டில் மக்கள் தொகை வேகமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் ஒன்று போதும் என்ற மனம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் மட்டும்தான். தமிழக கிராமங்களிலும் இது விதிவிலக்கல்ல. ஆனால் வட இந்திய நகரங்களில் கூட இந்த கணக்கு செல்லுபடி ஆவதில்லை. அதனால் இந்தியாவில் எண்ணிக்கை குறைவதாக இல்லை.

அதேநேரத்தில் அதிகம் பெற்றால் அவதி என்ற பிரச்னை வட இந்தியர்களுக்கு இல்லை. நாட்டின் பெரும்பகுதி நிதி வட இந்திய மாநிலங்களை வளப்படுத்ததான் செலவிடப்படுகிறது. மத்திய அரசுப் பணி என்றாலே அது வட இந்தியர்களுக்கு என்றாகிவிட்டது. அதுமட்டுமல்ல மாநில பணிகளிலும் ‘நாடு முழுவதும் யார் வேண்டுமானலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற விதியும் அவர்களுக்கு உதவுகிறது.

நாடு முழுவதும் ஒரே மாதிரி கல்வி திட்டம், கட்டாய நுழைவுத் தேர்வு ஆகியவை நமது கல்வி வாய்ப்பையும் பறிக்க ஆரம்பித்துள்ளன. அதனால் மக்கள் தொகையை குறைக்க முனைப்பு காட்டிய தென்னிந்திய மக்கள் இளிச்சவாயர்களாக காட்சி தருகின்றனர். அதேநேரத்தில் உயர்கல்வி, வேலை வாய்ப்பு அரிதாகிவிட்ட சூழலில் போட்டிக்கு நாம் அதிகம் பெற்றாலும் அல்லல்தான். எனவே குடும்பத்தை நாம் திட்டமிட்டால், அரசுகள் நமது நலனை திட்டமிட வேண்டும். இல்லாவிட்டால் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் பிரச்னைதான்.

- ரகு

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்