SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விம்பிள்டன் டென்னிஸ் அரை இறுதியில் கெர்பர் : செரீனாவும் முன்னேறினார்

2018-07-11@ 01:04:49

லண்டன் : விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் அரை இறுதியில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். கால் இறுதியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (14வது ரேங்க்) நேற்று மோதிய கெர்பர் (11வது ரேங்க்) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஓஸ்டபென்கோ (12வது ரேங்க்) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் டொமினிகா சிபுல்கோவாவை (ஸ்லோவகியா) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்துக்கு நீடித்தது.
அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது கால் இறுதியில் கமிலா ஜார்ஜியுடன் (இத்தாலி) நேற்று மோதினார். தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடிய செரீனா 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய செரீனா 6-3 என 2வது செட்டை கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

அதே வேகத்துடன் விளையாடி 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்திய அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்றில், அர்ஜென்டினா வீரர் மார்டின் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5), 5-7, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 4 மணி, 24 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்), ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா), கெய் நிஷிகோரி (ஜப்பான்), ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா), மிலோஸ் ரயோனிச் (கனடா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்ரிக்கா) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் திவிஜ் ஷரண் - ஆர்டெம் சிடாக் (நியூசிலாந்து) ஜோடி 1-6, 6-7 (3-7), 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜொனாதன் எர்லிச் (இஸ்ரேல்) - மார்சின் மட்கோவ்ஸ்கி (போலந்து) ஜோடியை போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 50 நிமிடத்துக்கு நடந்தது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்