SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலவில் காற்று இருக்கா? இல்லையா?

2018-07-10@ 10:03:49

நிலா... உச்சரிக்கும்போதே பல்வேறு எண்ணங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஊடுருவுகின்றன. குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி உணவு ஊட்டுவது முதல் காதலியின் அழகு, நடை, உடை, பாவனையை வர்ணிப்பது வரை பல்வேறு தரப்பினருக்கும் வெவ்வேறு தாக்கங்களை இது ஏற்படுத்தி வந்திருக்கிறது. நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த நிலா, கண்ணிற்குத் தெளிவாக தெரிவதாலும், முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலம் தொட்டே வாழ்வியலில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியுள்ளது. பூமிக்கான ஒரே ஒரு இயற்கைத் துணைக்கோளும் இதுதான்.

பூமியை ஒரு நீள் வட்டப்பாதையில் சுற்றிவர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. பூமிக்கும், நிலாவிற்கும் இடையேயான சராசரி தொலைவு 3 லட்சத்து 84 ஆயிரத்து 403 கிமீ தூரமாகும். நிலா குறித்து ஆராய சோவியத் ஒன்றியத்தால் ஏற்படுத்தப்பட்டதுதான் லூனா திட்டம். இதன்படி, முதல் லூனா விண்கலம் 1959 ஜனவரி 2ம் நாள் அனுப்பப்பட்டது. நிலவின் வட்டப்பாதைக்குச் சென்ற இக்கலன் சந்திரனுடனான தாக்கத்தை இழந்ததால் வெடித்துச் சிதறியது. அடுத்ததாக அனுப்பப்பட்ட லூனா-2 1959 செப்.12ல் சந்திரனை அடைந்தது. புவி இல்லாத ஒரு நிலப்பரப்பில் மனிதன் உருவாக்கிய பொருள் முதன் முதலில் தொட்டது நிலாவில்தான். அந்தச் சிறப்பை லூனா 2 பெற்றது.

தொடர்ந்து லூனா-24 வரை நிலாவிற்கு அனுப்பப்பட்டன. பின்னர் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து அப்பல்லோ திட்டம் மூலம் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்கள் பயணித்தனர். அப்பல்லோ-11ல் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல்முறையாக கால் பதித்தார். இருப்பினும் நிலவிற்கு ஆளில்லாத விண்கலன்களே தற்போது அனுப்பப்படுகின்றன. புவியின் ஈர்ப்பைவிட நிலவின் ஈர்ப்பு 6 மடங்கு குறைவு. இதனால் பொருள்களின் விடுபடு வேகமும் குறைவாக இருக்கும். நிலவின் பரப்பில் வெப்பநிலை அதிகம். எனவே அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச்சென்றுவிடுகின்றன. இதனால்தான் நிலவில் காற்று இருப்பதில்லை.
தொடர்ந்து பல்வேறு நாடுகள் நிலா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. இந்தியாவும் சந்திராயன்-1-ஐ அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்