SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலை முறைகேடு வழக்கு : குடந்தை கோர்ட்டில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜர்

2018-07-07@ 01:52:57

கும்பகோணம்: பழநி முருகன் ேகாயிலில் சிலை முறைகேடு வழக்கு தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜரானார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது. இதுதொடர்பாக, கோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா (66), கோயிலின் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி (60), சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா (77), நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது 4 பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இதைதொடர்ந்து, வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் கோர்ட்டில் நேற்று காலை தனபால் சார்பில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை மதியம் விசாரிப்பதாகவும், அதுவரை நீதிமன்றத்தின் உள்ளே தனபால் அமருமாறும் நீதிபதி உத்தரவிட்டார். மதியம் நீதிபதி முன், தனபாலுக்கு ஜாமீன்தாரராக அவரது உறவினர்கள் கனகரத்தினம் (65), யோகானந்தம் (57) ஆகியோர் ₹1 லட்சம் பிணையத்தொகை, சொத்து பத்திரங்கள், தனபாலின் பாஸ்போர்ட், அவர் எங்கு தங்குகிறார் என்ற விவரத்தை தாக்கல் செய்தனர்.இதை ஏற்று கொண்டு கும்பகோணம் நகரை விட்டு 60 நாட்களுக்கு தனபால் வெளியே செல்லக்கூடாது, செல்போன் பயன்படுத்தக்கூடாது, இணையதளம் பயன்படுத்தக்கூடாது. அவர் தங்கியுள்ள இடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சார்பில் ஒரு எஸ்ஐ, 4 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதை டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் கண்காணிக்க வேண்டும், போலீசாருக்கான செலவினங்களை தனபால் ஏற்று கொள்ள வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்போடு கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு தனபால் சென்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்