இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு
2018-06-28@ 01:33:29

திருவனந்தபுரம்: கேரளாவில் தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராய். துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மெர்சி. திருமணத்திற்கு முன்பு தூரத்து உறவினரான ஒரு பாதிரியார் மெர்சியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபையின் கீழ் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று பாதிரியாரிடம், முன்பு நடந்த சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டினார்.
இதை கேட்ட பாதிரியார், கணவரிடம் சம்பவத்தை கூறுவேன் என்று மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி மேலும் 4 பாதிரியார்கள் அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இது ராய்க்கு தெரிய வந்தது. இது குறித்து அவர், மலங்கரை கத்தோலிக்க சபை பிஷப்பிடம் புகார் செய்தார். இதையடுத்து நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் ஆகிய 5 பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மெர்சியின் கணவர் ராய் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது 5 பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் 3 பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும் என்றார்.
மேலும் செய்திகள்
மாடுகளை வளர்ப்பது சிறைக் கைதிகளின் குற்ற மனநிலையை குறைக்கும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பு: ரகுராம் ராஜன் கருத்து
கேரள மாநிலம் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 நாட்களில் கோடிகளில் வருமானம்
இனி யார் தப்பு செய்தாலும் என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா அமைச்சரின் எச்சரிக்கை
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி: காயமடைந்தவருக்கு ரூ.50,000...பிரதமர் மோடி அறிவிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கு: வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.2,400 கோடி சொத்துகள் ஏலம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்